பெங்களூரில் நடைபெற்ற நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தனது 3-ஆவது முயற்சியில் 86 புள்ளி 18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்தார்.
கென்ய வீரர் ஜூலியஸ் யெகோ வெள்ளிப் பதக்கமும், இலங்கை வீரர் ருமேஷ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இந்தியத் தடகள சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் நீரஜ் சோப்ரா இந்த போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.