உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் காகித ஆலையில் பாயிலர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
முசாபர்நகரில் செயல்பட்டு வரும் காகித தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் காகித ஆலையில் பணியாற்றிய ஊழியர் உயிரிழந்தார். சுமார் 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.