ஹிமாச்சலில், மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டியில், பாஜக எம்பி கங்கனா ரனாவத் ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்தும், பலர் காணாமலும் போயுள்ளனர்.
பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக, சிம்லா, மண்டி, குலு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், மண்டியில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் ஆய்வு மேற்கொண்டு, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.