மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்தது.
கருங்காலக்குடி பகுதியில் அப்துல் என்பவர் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டுத் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.