கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மொத்த விற்பனையகத்தில் இருந்து வாங்கிய தண்ணீரில் தூசி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சந்தைப்பேட்டைப் பகுதியில் குடிநீர் பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்யும் கடையில், திருமால் முருகன் என்பவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார்.
பாதி தண்ணீரைக் குடித்து விட்டுப் பார்த்தபோது அதில் தூசியிருந்தது தெரியவந்தது. இது குறித்து முறையிட்டதற்குக் கடை விற்பனையாளர் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
எனவே, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடையில் ஆய்வு நடத்த வேண்டும் என வாடிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார்.