நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே துப்பாக்கியுடன் வாகனத்தில் வந்த ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அளக்கரை ரேலியா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், கேரள பதிவெண் கொண்ட ஜீப்பில் வந்தவர்களைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.