பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணைய வழியில் தொடங்கியது.
முதல் கட்டமாக 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
பொதுப் பிரிவினருக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையும், பொது கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து, துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையும், SCA, SC பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.