அமெரிக்காவில் மூன்றாவதாக ஒரு கட்சியைத் தொடங்குவது அபத்தமானது என அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த எலான் மஸ்க் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றார்.
டிரம்பின் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து வந்த அவர், ‘அமெரிக்கா பார்ட்டி’ என்ற புதிய கட்சியை தற்போது தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், அமெரிக்காவில் இரு பெரும் கட்சிகள் இருக்கும் நிலையில், மூன்றாவது கட்சி ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை என கூறியுள்ளார்.
மேலும் 3வது கட்சிக்கு வெற்றி கிடைக்காது எனத் தெரிந்தும் எலான் மஸ்க் புதிய கட்சியைத் தொடங்கியது வேடிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.