திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இங்கு ஆனி பிரம்மோற்சவத்தை ஒட்டி தங்கக் கொடி மரத்தில், வேத மந்திரங்கள் முழங்கக் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. தினந்தோறும் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிக்கவுள்ளனர்.