மடப்புரம் காவலர் அஜித்குமார் கொலை வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் கோயில் ஊழியர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அஜித் குமாரின் குடும்பத்தினரிடம், உரியப் பணம் பெற்றுத் தருவதாகச் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாகக் கூறினர்.
அதனால், அந்த வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கையும் நாளை விசாரிப்பதாகத் தெரிவித்தார்.