திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோனாங்குட்டைகேட் பகுதியில் மூர்த்தி என்பவர் தனது இருசக்கர வாகனத்தைச் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது 2 பேர் வண்டியின் பூட்டை உடைத்துத் திருட முயன்றனர்.
இதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களைக் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கினர். தகவல் அறிந்து சென்ற போலீசார் இருவரையும் மீட்டு காவல்நிலையம் நிலையம் அழைத்துச் சென்றனர்.