அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு தனது நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து 22 கோடியே 48 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
ஆனால், தனது நிறுவனத்திற்காகப் பணத்தைச் செலவு செய்யாமல் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன் உட்பட 4 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
வழக்கை ரத்து செய்யக் கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சமரச தீர்வு மையத்திற்கு 15 லட்சம் ரூபாய் செலுத்த ரவிச்சந்திரன் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை ரத்து செய்தார்.