மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள வேளாண் பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
நவி மும்பையின் துர்பே செக்டார் பகுதியில் வேளாண் விளைப்பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையின் சேமிப்பு கிடங்குகள் உள்ளது. இங்கு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதில் கிடங்கிலிருந்த பொருட்கள், வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.