மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகரில் உள்ள வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், டிஆர்டிஓவால் தயாரிக்கப்பட்ட மவுண்டட் கன் சிஸ்டம் காட்சிப்படுத்தப்பட்டது.
இது 152 மில்லி மீட்டர் பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் பாலைவனம் மற்றும் உயரமான பகுதிகளில் ஷூட்-அண்ட்-ஸ்கூட் திறனுடன் செயல்படும் திறன் கொண்டது.
ஷூட்-அண்ட்-ஸ்கூட் என்பது இலக்கை நோக்கி சுட்ட பின், உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று எதிரி பீரங்கிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முறை என்பது குறிப்பிடத்தக்கது.