குஜராத்தில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக வதோதராவில் உள்ள தேவ்தாம் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் 4 மதகுகள் வழியாகத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கட்ச் பகுதியில் உள்ள பெராச்சியா அணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால், அப்தசா பகுதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
ஆதிபூர், காந்திதாம் பகுதிகளில் கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.