தெலுங்கு இயக்குநர் புரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
பவன்கல்யாணை வைத்து பத்ரி, மகேஷ்பாபுவை வைத்து போக்கிரி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளவர் புரி ஜெகநாத்.
இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இதில் தபு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.