இந்தியாவின் தலைமையின்கீழ், பிரிக்ஸ் கூட்டமைப்பை புதிய வடிவத்தில் வரையறுப்போம் என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் நாளில் உலக அமைதி, பாதுகாப்பு குறித்த சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் சர்வதேச சீர்திருத்தம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்புக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2-ம் நாள் உச்சிமாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி பிரிக்ஸ் என்றால் ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை உருவாக்குதல் என்று கூறினார்.
இந்தியா தலைமையின் கீழ் பிரிக்ஸ் கூட்டமைப்பை புதிய வடிவத்தில் வரையறுப்போம் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன் நிறைவாக பிரிக்ஸ் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
வரும் 2026-ல் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும் என்றும், 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.