சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி, சடலத்தை வாங்க மறுத்து, 2ஆவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமறாக்கி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரபு என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த வசந்த குமார், சூர்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கொல்லப்பட்டவரின் சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.