மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் பதவி விலக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் பதவி விலக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகளுடனான நிகழ்ச்சியின்போது தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியை பறிப்பேன் என முதலமைச்சர் தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த வரி மோசடியில் மண்டல தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.
மேலும், மதுரையில் அமைச்சர்கள் பிடிஆர் – மூர்த்தி இடையே கோஷ்டி பூசல் நிலவுவதாகவும் தகவல் வெளியான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.