உலகிலேயே மூன்றாவது உயரமான 92 அடி உயரமுள்ள தீர்த்தகிரி முருகன் சிலையை அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ள இஸ்லாமிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அடுத்த தீர்த்தகிரி மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
உலகத்திலேயே மூன்றாவது மிக உயரமான முருகன் சிலையை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், தீர்த்தகிரிமலையில் உள்ள முருகன் சிலையை பஷீர் என்ற இஸ்லாமிய இளைஞர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில், முருகனைச் சிலையை அவதூறாகச் சித்தரித்தும், கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்தும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், கோடிக்கணக்கான பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ள இஸ்லாமிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.
மேலும், காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.