காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?
Aug 26, 2025, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

Web Desk by Web Desk
Jul 8, 2025, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு மேட்டுப்பாளையத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வரும் தோட்டக்கலைத்துறையின் பழ பண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.  உயர்நீதிமன்ற உத்தரவின் படி கடந்த மூன்று ஆண்டுகளாக மூடியிருக்கும் பழ பண்ணையை யானைகள் வழித்தடத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் கல்லார் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான இந்த பழ பண்ணை.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு 125 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இந்த பழ பண்ணையில் பல்வேறு அரியவகை மரங்களுக்கான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் மூலம் கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது.

ஆண்டு முழுவதும் ஒரே சீதோஷின நிலை நிலவுவதால், உலகில் மிகச் சில இடங்களில் மட்டுமே அரிதாக விளையக்கூடிய மருத்துவ குணம் மிக்க துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள், வெண்ணைப்பழம், லிட்சி, மலேயன் ஆப்பிள், சிங்கபூர் பலா என ஏராளமான பழ வகை மரங்கள் இங்கு வளர்கின்றன.

மேலும், 300-க்கும் மேற்பட்ட சில்க் காட்டன் ட்ரீ என்றழைக்கபடும் இலவம்பஞ்சு மரங்கள், அரிதான மலர்களும், மூலிகைகளும் இயற்கையின் பொக்கிஷங்களாக இங்குக் கொட்டிக் கிடக்கின்றன. இத்தகைய சிறப்புமிக்க பழ பண்ணையைப் பார்வையிட அனுமதி மறுத்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யானைகளின் வழித்தட பாதையில் உள்ள குறுக்கீடுகள் குறித்து   நடவடிக்கை எடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி யானை வலசைப்பாதையில் உள்ள 123 ஆண்டுகள் பழமையும் பெருமையும் கொண்ட கல்லாறு பழப் பண்ணையை வனத் துறையினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக தற்போது கல்லாறு பலபண்ணைக்குள் சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனமாகவும், ஏழைகளில் சுற்றுலாத்தலமாக்கவும் திகழ்ந்து வரும் அரசு தோட்டக்கலை பழ பண்ணையை யானைகளின் வழித்தடத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்து ஏற்கனவே இருந்தது போலப் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: கல்லாறு பழ பண்ணைமீண்டும் திறக்கப்படுமா?newsTodayWaiting tourists: Will the Kallar Fruit Farm reopen?சுற்றுலாப்பயணிகள்
ShareTweetSendShare
Previous Post

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

Next Post

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

Related News

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

கடலுக்குள் காற்றாலை அசத்தும் டென்மார்க் : தமிழகத்தில் வருவது எப்போது?

ஓய்வுபெறும் MiG-21 போர் விமானம் : பிரியாவிடை கொடுத்த விமானப்படை தலைவர்!

போக்குவரத்தில் புதிய புரட்சி : வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பம்!

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் டெல்லியில் தொடக்கம்!

லடாக் : ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பிக் அப் வாகனம்!

இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை : ராஜ்நாத் சிங்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுவிப்பு!

ராமநாதபுரம் : மூதாட்டி நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்ததாக புகார்!

இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

டிரம்பின் 50% வரி விதிப்பு – ஆகஸ்ட் 27 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்!

செங்கல்பட்டு : திருட முயன்ற நபரை கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள்!

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு!

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies