சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் கடந்த ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சீதம்மாள் காலனியில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக இந்த பகுதியில் மின்சாரம் விநியோகம் குறைவாக இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மின்வாரிய அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஊழியர்கள் குழித்தோண்டி பழுது பார்க்க வந்தபோது போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
முதலமைச்சரின் கான்வே வாகனம் செல்லும் சாலையில் குழிதோண்டக் கூடாது என போக்குவரத்து காவலர்கள் கூறியதால் மின்வாரிய ஊழியர்கள் திரும்பிச் சென்றதாக கூறியுள்ளனர்.
மேலும், மின் விநியோகம் தடைப்படாமல் முழுமையாகக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.