பீஹாரில் மாந்திரீகத்தில் ஈடுபட்டதாகக்கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பூர்ணியா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிராமத்தில் ராம்தேவ் என்பவரின் குழந்தை கடந்த 3 நாட்களுக்கு முன் உயிரிழந்தது.
இதற்கு அதே கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் செய்த மாந்திரீகம்தான் காரணம் என்று கருதி, அவர்களைக் கிராம மக்கள் எரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
ம்பவ இடத்திலிருந்து, பாபுலால், மஞ்சித், சீதா தேவி, அரணியா தேவி, காக்தோ ஆகிய 5 பேரின் எரிந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.