தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் எனக் கூறி நிலத்தை அபகரிக்க முயல்வதாக விவசாயி புகார் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ரவிராஜ் என்பவருக்கு, திருமலை சமுத்திரம் பகுதியில் 22 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் எனக்கூறிக்கொண்டு ஆறுமுகம் அசோக் என்பவர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
தம்மிடம் அனுமதி பெறாமலே தன்னுடைய நிலத்தில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ரவிராஜ், செந்தில் பாலாஜியின் உறவினர் எனக்கூறும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.