ஜப்பான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல், கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப், இந்த நடவடிக்கையை 90 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அந்த காலக்கெடு நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில், கால அவகாசத்தை ஆகஸ்ட் 1 வரை அமெரிக்க அரசு நீட்டித்துள்ளது.
இந்நிலையில், ஜப்பான், தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், இந்த கூடுதல் வரி விதிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலாகும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.