பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!
Apr 29, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல்வாதிகளின் பேச்சுக்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள், பொன்முடிக்கு எதிரான இந்த  வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முகாந்திரம் இல்லை எனவும் இந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகவும் வாதிட்டனர்.

இதனைக் கேட்ட நீதிபதி வேல்முருகன், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனக் காட்டமாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, ஒரு வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணையே சம்பவம் நடந்ததா இல்லையா என்பதுதான் எனவும் ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணைக்கே முகாந்திரம் இல்லை எனத் தெரிவிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எதிரான வழக்கு என்றால் விசாரணைக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறும் அரசு தரப்பு, வேண்டாதவர்களுக்கான வழக்கு என்றால் விசாரணைக்கு உகந்தது என்று தெரிவிக்கிறீர்கள் அது ஏன்? என அரசு தரப்பை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார்.

இறுதியாக வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்ததாகப் பிறப்பித்த உத்தரவு குறித்து புகார்தாரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்   அதைச் செய்யத் தவறினால் வழக்கைத் தீவிரமாகக் கருத முடியும் எனவும் ஆணையிட்டார்.

தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  வேல்முருகன்,  முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags: ponmudi news todaytn politicalJudge Kattam in the case against Ponmudiநீதிபதி காட்டம்பொன்முடிக்கு எதிரான வழக்கு
ShareTweetSendShare
Previous Post

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

Next Post

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies