ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!
Sep 12, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாநகராட்சியின் ஆளுங்கட்சி மண்டலத் தலைவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்திருக்கும் உத்தரவின் பின்னணியில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நீதிமன்றமும், மாமன்றமும் எடுக்க வேண்டிய முடிவை ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுகவினரே எடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தனியார் கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றார்போல கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படும் நிலையில், அந்த வரிவிதிப்பில் முறைகேடு நடைபெறுவதாகப் புகார் எழுந்தது.

மாநகராட்சியில் தீர்மானம் மூலமாகவோ அல்லது நீதிமன்ற உத்தரவின் மூலமாகவோ குறைக்கப்பட வேண்டிய வரியை மாநகராட்சி அதிகாரிகளின் ஆதரவோடு ஆளுங்கட்சியினர் குறைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது வரியைக் குறைப்பது போலக் குறைத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து கணிசமான தொகையைப் பெற்றதன் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு மதுரை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

வரிக்குறைப்பு மோசடியைக் கண்டுபிடித்த மதுரை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் தினேஷ்குமார், ஐந்து பில் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்ததோடு, வரிவிதிப்பு அதிகாரியின் பாஸ்வேர்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். கடந்த ஓராண்டாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில்   மண்டலத் தலைவர் ஒருவரின் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் கட்டடங்களுக்கு வழக்கமாக வரிவிதிக்கும் வரிவிதிப்பு அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி கம்யூட்டர் ஆப்ரேட்டர்களே ஆளுங்கட்சியினரின் உத்தரவுக்கு ஏற்ப வரியை நிர்ணயம் செய்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

தோராயமாக 10 ஆயிரம் ரூபாய் வரி கட்டவேண்டிய தனியார் நிறுவனத்தை அணுகி 5 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும் எனக் கட்டணத்தை வாங்கிவிட்டு அனைத்து வரிகளையும் கட்டியது போலக் கணக்குக் காட்டியிருப்பதும் உறுதியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்றிருக்கும் இந்த மோசடி சம்பவம் ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் உத்தரவின்படியே நடந்ததாகக் கைதானவர்கள் ஒப்புக் கொண்டதால் பிரச்சனை பூதாகரமானது. மிகப்பெரிய அளவில் நடைபெற்றிருக்கும் மோசடியை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கத் தொடங்கியதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவை விசாரிக்கும் படி உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற விசாரணையில்  திமுக மண்டலத் தலைவர்கள் புவனேஷ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, கவிதா ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

மண்டலத் தலைவர்களிடம் நடைபெற்ற விசாரணை அறிக்கையின் அடிப்படையில் 5 மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் உத்தரவை ஏற்று அனைவரும் ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் மதுரை மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 200 கோடி ரூபாய் அளவில் நடைபெற்றிருக்கும் வரிக்குறைப்பு மோசடியை எதிர்க்கட்சிகள் பெரிதாக்குவதற்கு முன்பாகவே இதனை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ராஜினாமா தொடர்பான உத்தரவை முதல்வர் பிறப்பித்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

முறைகேடு தொடர்பான புகார் கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில், ஆளுங்கட்சி மண்டல தலைவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

அதே நேரத்தில் மதுரை மாநகராட்சியில் மட்டுமல்லாது மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் அனைத்து மாநகராட்சிகளிலும் உரிய ஆய்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நீதிமன்றமும், மாமன்றமும் கூடி எடுக்க வேண்டிய முடிவை ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுகவினரே எடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: வரிகுறைப்பு மோசடிகூண்டோடு சிக்கிய திமுகவினர்Maduraiமதுரை மாநகராட்சிmk stalin news todayRs. 200 crore tax deduction scam: DMK members trapped in a cage in Madurai
Share
Tweet
SendShare
Previous Post

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

Next Post

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies