இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜயதசமியன்று ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு விழா தொடங்கும் என்றும், இதில் அனைத்து தொண்டர்களும் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.
நூற்றாண்டு விழாவிற்கான திட்டமிடல் குறித்துக் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சமூகத்தில் நல்லிணக்கத்தை மேம்படுத்தக் கூட்டங்களுக்கும், கருத்தரங்கங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதில் பாரதத்தின் பெருமை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாடு அனைத்து துறைகளிலும் குறிப்பாகப் பொருளாதார ரீதியா முன்னேறி வருவதாகக் கூறிய அவர், தனிநபர் நலன், நல்லிணக்கம், சுற்றுச்சூழல் மற்றும் தேசத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டுமென்றும் சுனில் அம்பேகர் தெரிவித்தார்.