திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகக் கோவையில் நடுரோட்டில் காதலனிடம் காதலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, இளம் காதல் ஜோடி, பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டனர்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், சம்பந்தப்பட்ட இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார். அப்போது காவல் பணியிலிருந்து போலீசார் உடனடியாக இருவரிடம் விசாரணை நடத்தினர்.
வடவள்ளியைச் சேர்ந்த அந்த பெண்ணை, திருப்பூர் அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் கடந்த 9 மாதங்களாகக் கோவையில் தனியாக வீடு எடுத்துத் தங்க வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றியதாகவும், விசாரணையின் அந்த பெண் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்திற்குச் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.