தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் பிரியாணி கடை வைப்பதற்கு FRANCHISE வழங்குவதாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரன், தனது மரக்கார் பிரியாணி நிறுவனத்தின் கிளை உரிமை பெற்றுத் தருவதாகவும், லாபத் தொகையில் 10 சதவீதம் வழங்கப்படும் எனவும் ஆசைவார்த்தை கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், பலரிடம் பல கோடி ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்ட கங்காதரனை போலீசார் கைது செய்தனர்.