ராணிப்பேட்டை அருகே நகைக் கடையின் சுவரில் துளையிட்டு 3 சவரன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் கூட்ரோடு மையப்பகுதியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகன் என்பவர் நகை அடகுக் கடையுடன் அரிசி மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் நேற்றிரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் கடையின் பிக்கம் சுவரில் துளையிட்டு உள்ளே இருந்த 3 சவரன் தங்க நகை ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.