டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைக் கடவுள் கொடுத்த பரிசாக நினைப்பதாக நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகை சிம்ரன், ரேவதி மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகை சிம்ரன், 30 வருட உழைப்புக்குக் கிடைத்த பலனாக டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பார்ப்பதாகக் கூறினார். மேலும் படத்தைக் கடவுள் கொடுத்த பரிசாக நினைப்பதாகவும் தெரிவித்தார்.