தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளரான எம்.எம் கீரவாணியின் தந்தையும், பாடலாசிரியருமான சிவசக்தி தத்தா காலமானார்.
92 வயதான இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார். பாகுபலி, RRR, மகதீரா, ராஜன்னா மற்றும் ஸ்ரீ ராமதாசு போன்ற படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார்.
இவர் 2007 ஆம் ஆண்டு சந்திராஸ் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சிவசக்தி தத்தா காலமானார்.