ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் ரஃபேல் விமானத்தைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரான்சின் பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் ரபேல் போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
உலகின் தற்போதைய சிறந்த போர் விமானங்களில் ரபேலும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விமானம் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்ரேஷன் சிந்தூரின் போது, இந்தியா பயன்படுத்திய ரபேல் போர் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, பொய்யான தகவல்களைச் சீனா பரப்பி வருவதாக டசால்ட் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ரஃபேல் விமானத்தைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், 12 ஆயிரம் மீட்டருக்கு அதிகமான உயரத்தில் பறந்த விமானத்தில் மட்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், டசால்ட் ஏவியேஷன் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எரிக் டிராப்பியர் விளக்கம் அளித்துள்ளார்.