பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசுமுறை பயணமாக பிரேசில் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பிரேசிலிகா சென்றடைந்தார். அங்கு, அதிபர் லூயிஸ் இனாசியோவின் அதிகாரப்பூர்வ இல்லமான அல்வோரடா அரண்மனை சென்ற அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றதையடுத்து இருநாட்டு தலைவர்களும் இந்திய, பிரேசில் தேசிய கொடிகளுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் பாரம்பரிய முறைப்படி 114 குதிரைகளின் பேரணியுடன் பிரதமர் மோடிக்கு தனித்துவமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இசை குழுவினரால் நிகழ்த்தப்பட்ட இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சியை இருநாட்டு தலைவர்களும் ரசித்துக் கேட்டனர்.
இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், சிலி அதிபர் கேப்ரியல் போரிக், பிரேசில் முன்னாள் அதிபர் டில்மா ரவுஷெப் ஆகியோரை சந்தித்து பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.