திருச்சி அருகே காவிரி கிளை வாய்க்கால் கரைகளில் உள்ள வயல்வெளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கொண்டு செல்ல உரிய பாதை இல்லாததால், ஆண்டுதோறும் 500 ஏக்கர் நிலங்கள் தரிசாக விடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 120 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நிலங்கள் உள்ள நிலையில், அங்குள்ள 17 கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெற்று விவசாய சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் காவிரி கிளை வாய்க்கால் கரைகளில் உள்ள பல ஏக்கர் பரப்பளவிலான வயல்வெளிகளுக்கு உரிய பாதை இல்லாததால், அங்கு வேளாண் இயந்திரங்களை கொண்டு சென்று பயிர்களை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள், காவிரி கிளை வாய்க்கால் கரைகளில் வேளாண் வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.