விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை மாயா ராஜேஷ்வரன் ரேவதிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர விடுத்துள்ள பதிவில், 16 வயதில் 76% வெற்றி விகிதத்துடன், டென்னிஸ் உலகின் சிறந்த பயிற்சி மையமான ரஃபா நடால் அகாடமியில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற்று வரும் மாயா, இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. விடா முயற்சியுடனும் கடின உழைப்புடனும் அவர் இன்னும் பல சாதனைகள் புரிய மனதார வாழ்த்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.