நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து மர்ம நபர்கள் கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வள்ளியூரைச் சேர்ந்த ருக்மணி என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் 40 நாட்களுக்கு முன்புதான் உயிரிழந்தார்.
இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ருக்மனியை தாக்கி கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த 10 சவரன் நகைகளைப் பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு கூராய்விற்காக அனுப்பி வைத்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.