கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடம் 2 லட்சம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, இபிஎஸ் ஐ காணத் தொண்டர்கள் முண்டியடித்தப்படி நின்றிருந்தபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அதிமுக நிர்வாகிகளிடம் மர்மநபர்கள் 2 லட்சம் ரூபாய் பணத்தை பிக்பாக்கெட் அடித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் 6 பேரைக் கைது செய்த போலீசார், அவர்களைச் சிறையில் அடைத்தனர்.