நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி வேன்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர்களும், மாணவர்களும் காயமடைந்தனர்.
கீரம்பூர் சுங்கச்சாவடியிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி தனியார் பள்ளி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது காரொன்று திடீரென இடையே புகுந்ததால் பள்ளி வேன் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்துள்ளார். இதனால் பின்னால் வந்த மற்றொரு பள்ளி வாகனமும், காரும் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பள்ளி வாகன ஓட்டுநர்கள் முருகேசன், பெருமாள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.