வேலூரில் முதலமைச்சரால் திறக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் அவல நிலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக-வினர் கைது செய்யப்பட்டனர்.
198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையைக் கடந்த ஜூன் 25-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில், ஒருவார காலத்திற்குள்ளாகவே மருத்துவமனை மூடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையின் அவல நிலையைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.
ஆனால் அதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதை மீறி போராட்டம் நடத்த வந்த முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு உட்பட 200-க்கும் மேற்பட்ட அதிமுக-வினர் போலீசாரால் வழிமறித்து கைது செய்யப்பட்டனர்.