கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் நூதன கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டு குழியுமாய் காட்சியளிப்பதால் விபத்துகள் அதிகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இது குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் சாலைகளைச் சீரமைக்கக் கோரி சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்து சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.