குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
வதோதரா – ஆனந்த் நகரங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீதுள்ள காம்பிரா பாலம் 43 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் வதோதரா – ஆனந்த் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாலம் இடிந்தபோது அவ்வழியே சென்ற லாரி உட்பட 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்து மூழ்கின. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.