வால்பாறையை அடுத்த கருமலை இரைச்சல் பாறை அருவியில் ஆர்ப்பரித்துக் கொண்டும் தண்ணீரைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே அமைந்துள்ள கருமலை அருவியில் இருந்து வரும் தண்ணீர் பாறைகளில் மோதி அதிக சத்தத்தை எழுப்புவதால் இது இரைச்சல் பாறை அருவி என்றழைக்கப்படுகிறது.
வால்பாறை அருகே உள்ள கிராஸ் ஹில்ஸ் புல்வெளி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக இரைச்சல் பாறை அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டி வருகிறது.
முற்றிலும் வனத்துறைக்குச் சொந்தமான இடத்திற்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரைச் சுற்றுலாப் பயணிகள் தொலைவிலிருந்து கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.