கடலூர் ரயில் விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மாணவர்கள் சாருமதி, செழியன் ஆகியோரின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நிமிலேஷ் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிமலேஷின் சகோதரர் விஷ்வேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.