பறந்து போ திரைப்படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக, இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.
‘பறந்து போ’ திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதில், நடிகர் சிவா, இயக்குநர் ராம், நடிகை கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ராம், படத்தை முதலில் யாரும் வாங்க முன்வரவில்லை எனவும், crush பாடல் தொடக்கத்தில் வெறும் 30 ஆயிரம் பார்வைகளை மட்டுமே பெற்றதாகவும் கூறினார்.