கேரளாவில் பொது வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி சங்கங்கள் உள்ளிட்டவை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து அரசு பேருந்துகளை இயக்கியபோது இடதுசாரி சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், கேரளாவுக்குச் செல்லும் 50க்கும் மேற்பட்ட தமிழக அரசு பேருந்துகள் கோவையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.