திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சி சங்கர மடம், வியாசராஜ மடம், ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் ஆகிய பழம்பெரும் ஆசிரமங்களின் மடாதிபதிகள் மற்றும் அவர்களுடன் வருகை தரும் 4 பேருக்கு ஏழுமலையான் கோயிலில் வருடத்தில் ஒருநாள் சிறப்புத் தரிசன வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் வியாச ராஜமட பீடாதிபதி சரஸ்வதி தீர்த்த சுவாமியுடன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஏழுமலையானை வழிபட்டார்.