சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் நடிகை அருணா வசித்து வருகிறார். இவரது கணவர் மோகன் குப்தா, வீடுகளில் உட்கட்டமைப்பு அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.