அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, ரயில்வே கேட்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
அதன்படி அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், ரயில் வாகன போக்குவரத்து 10,000க்கு மேல் உள்ள ரயில்வே கேட்களில் தானியங்கி இண்டர்லாக் அமைப்பு பொருத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இண்டர்லாக்கிங் கட்டுமான பணிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.